நமது மாம்ச மற்றும் ஆவிக்குரிய வாழ்வில், எப்போதும் பல சோதனைகளும் தடைகளும் இருக்கின்றது. கடந்த காலத்தில், இஸ்ரவேலர்கள் உணவும், தண்ணீரில்லாத வனாந்தரத்திலும், ராட்சதர் வாழ்ந்த கானான் தேசம் என்ற பெரும் சோதனைகளில் இருந்தப்போது, யோசுவாவும் காலேபும் தேவன்மீது மட்டுமே நம்பிக்கை வைத்தனர். அவர்களைப் போல, கஷ்டங்களில் தேவன் திறந்த நம்பிக்கையின் கதவை பார்க்கும் விசுவாசம் நமக்குத் தேவை.
இயேசுவின் சிலுவை மரணத்தால் சோர்ந்துப்போன ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்களுக்கு, உயிர்த்தெழுதல், பரமேறுதல் வாயிலாக தேவன் பரலோக ராஜ்யத்தின் நம்பிக்கையின் கதவைத் திறந்ததுபோலவும், இராமுழுவதும் மீன் அகப்படாத பேதுருவுக்கு, தம் வார்த்தையின்படி செயல்பட்டால் நிகழும் அற்புதத்தை இயேசு காண்பித்ததுபோலவும், இன்றும்கூட, “உலகம் முழுவதும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்” என்ற கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களின் வார்த்தைகள் நிச்சயமாக நிறைவேறும்.
கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என்முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை. சங்கீதம் 39:4–7
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:13–14
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை