நாம் ஒளியைப் பார்க்கும்போது,
நிழலானது நமக்குப் பின்னால் தோன்றுகிறது,
ஆனால் நாம் ஒளியினிடத்திலிருந்து திரும்பினால்
நிழலானது நம் வழியைத் தடுக்கிறது.
அதுபோலவே, மனிதகுலம் ஒளியாகிய தேவனை நோக்கிச் செல்லும்போது,
இருளானது அவர்களை ஒருபோதும் தடுக்க முடியாது.
பிதாவின் காலத்தில் எரேமியாவைப் போலவும்,
குமாரனின் காலத்தில் அப்போஸ்தலர்களைப் போலவும்,
நாம் தேவனுடைய மகிமையின் ஒளியை பிரகாசிக்கும்போது,
நம்மைச் சுற்றி துன்புறுத்தலையும் தடைகளையும் சந்திக்க நேரிடும்.
இருப்பினும், இறுதியிலே, நாம் அநேக ஆசீர்வாதங்கள் பெறுவோம்.
பிதாவின் காலத்தில் ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் யேகோவா தேவனுடைய ஒளியை பிரகாசித்தனர், மேலும் குமாரனின் காலத்தில் அப்போஸ்தலர்களான பவுல், பேதுரு மற்றும் யோவான்
இயேசுவின் மகிமையின் ஒளியை பிரகாசித்தனர்..
அதுபோலவே, பரிசுத்த ஆவியின் காலத்தில்,
உலகெங்கிலும் 175 நாடுகளில் உள்ள சபையின் உறுப்பினர்கள்
இரட்சகர்களாக வந்த கிறிஸ்து அன்சாங்ஹாங் மற்றும்
எருசலேமின் பரலோக தாயின் மகிமையான ஒளியை பிரகாசிக்கிறார்கள்.
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது,
கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்;
ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்;
அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும்,
உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.
ஏசாயா 60:1–3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை