இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறியபோது,
தேவன் முதலில் பஸ்காவின் வல்லமையை வெளிப்படுத்தி,
குறித்த காலத்தில் தலைமுறை தோறும் அதை ஆசரிக்கும்படி
அவர்களுக்குக் கட்டளையிட்டு, மோசேயின் நியாயப்பிரமாணத்தின்
வாயிலாக பஸ்காவை அறிவித்தார்.
பின்னர், பஸ்காவை ஆசரித்த பின்பு
தேவனுடைய ஜனங்கள் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு போற்றப்பட்டார்கள்,
மேலும் இயேசுவும் தமது சீஷர்களுடன் பஸ்காவை ஆசரித்து,
அவர்களுக்கு நித்திய ஜீவ ஆசீர்வாதத்தை வழங்கினார்.
கி.பி 325ல் பஸ்கா அழிக்கப்பட்டதிலிருந்து, எல்லா சபைகளும் பிறமதக் கடவுளின்
வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.
இருப்பினும், தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின்
போதனைகளின் வாயிலாக, தலைமுறைதோறும் ஆசரிக்கும்படி
தேவன் தம்முடைய ஜனங்களுக்குக் கட்டளையிட்ட
பஸ்காவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதைக் கைக்கொள்கிறார்கள்.
பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப்
பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான் . . .
கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும்
தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும்
மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம்
செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த
ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.
2 இராஜாக்கள் 23:21–25
அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்:
என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை
ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
மத்தேயு 26:18–19
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை