பரலோக ராஜ்யத்தில் பரலோகக் குடும்பம் இருக்கிறது என்று
தந்தை அன்சாங்ஹோங் நமக்குக் கற்பித்து, தாயாகிய தேவனும்
பரலோக சகோதர சகோதரிகளும் இருக்கிறார்கள் என்ற
உண்மையை நமக்குத் தெரியப்படுத்தினார்.
அவர் நம்மில் அன்புகூரியதுபோலவே,
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்றும் கட்டளையிட்டார்.
சிலுவை மரணத்தை சகிக்கும் அளவிற்கு தேவன் நம்மிடம் அன்புகூர்ந்ததுபோலவே,
அதே அன்பை உலகிற்கு பிரகாசிப்பதின் வாயிலாக நமக்குள் இருக்கும் நியாயப்பிரமாணத்தை
நம்மால் நிறைவேற்ற முடியும்.
பாவமன்னிப்பை பெறவும், இரட்சிப்பை அடையவும், பரலோக ராஜ்யம் பிரவேசிக்க
வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களை மட்டுமின்றி, அனைவருமே கருத்தில்கொண்டு
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்ற கட்டளையின்படி வாழ்வதையே
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் முதன்மைப்படுத்துகிறார்கள்.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல
நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்
என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால்,
அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
யோவான் 13:34–35
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை