“வனாந்தரத்தில், ஒரு தங்க நதியைப் பார்க்கிலும், குளிர்ந்த தண்ணீரே சிறந்தது; தொலைந்துபோன ஆட்டுக்கு, பணக்கார ராஜாவைக் காட்டிலும் மேய்ப்பனான சிறுவனே பெரியவன்” என்று சொல்வதைப் போல, இந்தப் பூமியில் மதிப்புமிக்கவைகளுக்கு பரலோக ராஜ்யத்தில் மதிப்புமிக்கவைகளுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருக்கின்றது. நாம் செல்லயிருக்கும் பரலோக ராஜ்யத்தில், உலகில் அநேகர் மதிப்புமிக்கதாகக் கருதும் செல்வம், கனம், அதிகாரம் ஆகியவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. அதனால்தான் ஆரம்ப காலசபையின் பரிசுத்தவான்கள் உபத்திரவங்களுக்கு மத்தியிலும் பரலோக ராஜ்யத்திற்காக வாழ்ந்தார்கள்.
தேவனுடைய ராஜ்யத்தில், தேவனுடைய வார்த்தையின்படி செய்வதுதான் மிகவும் மதிப்புமிக்க கிரியாகும். தேவனுடைய சபையின உறுப்பினர்கள், தாங்கள் பரலோக ராஜ்யத்தில் ராஜாக்களாக என்றென்றைக்கும் சதாகாலங்களிலும் ஆளுகை செய்து, வானத்து நட்சத்திரங்களைப் போல பிரகாசிப்பார்கள் என்ற தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, புதிய உடன்படிக்கையின் சத்தியத்தைக் கொண்டு காணாமற்போன ஒரே ஒரு ஆத்துமாவைத் தேடுகிறார்கள்.
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். எபிரெயர் 11:13
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானியேல் 12:3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை