இஸ்ரவேலர்கள் 40 வருடங்கள் வனாந்தரத்தில் இருந்தபோது தொடர்ந்து சாதகமற்ற சூழ்நிலைகளினால் தேவன் அவர்களைச் சோதித்து அவர்களின் இருதயங்களை புடமிட்டது போலவே, நமக்குக் கீழ்ப்படியக் கடினமாக இருக்கும் தேவனுடைய வார்த்தைகளோடு “இந்த வார்த்தைகளை உண்மையில் நான் பின்பற்றலாமா?” எனும் எண்ணத்தோடு அடிக்கடி போராடுகிறோம். இருந்தாலும், நாம் தேவனுடைய பிள்ளைகளாக மீண்டும் பிறந்து பரலோக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியும் விதமாக, தேவன் நம்மை பொன்னைப் போல புடமிட்டு தமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய செய்கிறார்.
1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியிடப்பட்ட பொல்லியன்னா என்ற நாவலில் இருந்த பொல்லியன்னா, "தி க்ளாட் கேம்" என்ற விளையாட்டின் மூலம் தன்னைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியடையச் செய்தார். அதைப்போலவே, தேவனுடைய பிள்ளைகளான நாமும், தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும் நம்மேல் பொழியப் போகும் மகிமையான பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்தித்து எப்பொழுதும் ஸ்தோத்திரம் செலுத்தி சந்தோஷமாய் இருக்க வேண்டும்.
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் . . .
1 தெசலோனிக்கேயர் 5:16-18
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
நீதிமொழிகள் 17:3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை