தேவன் எகிப்திய சேனைகளை சிவந்த சமுத்திரத்தில்
மூழ்கடித்தது போலவே, அவர் பாவத்தின் வல்லமை அழித்து,
உயிர்த்தெழுந்த நாளில் மனுகுலத்திற்கு உயிர்த்தெழுதலின்
நம்பிக்கையை வழங்கினார்.
இது, நாம் மாம்சத்திற்குரிய சரீரத்திலிருந்து ஆவிக்குரிய சரீரமாக
மறுரூபமாக்கப்படுவோம் என்பதை இயேசு வெளிப்படுத்திய நாளாகும்.
எகிப்திய சேனைகள் சிவந்த சமுத்திரத்தில்
புதைக்கப்பட்டு, இஸ்ரவேலர்கள் சிவந்த
சமுத்திரத்திலிருந்து கரையேறிய நாளும்
ஞாயிற்றுக்கிழமையாகும்.
எனவே, இந்த நாளை நினைவுகூரும் வகையில்,
பழைய ஏற்பாட்டில் முதற்பலன் பண்டிகை
ஸ்தாபிக்கப்பட்டது. மேலும்அது எப்போதும்
ஞாயிற்றுக்கிழமையில்தான் ஆசரிக்கப்பட்டது.
தீர்க்கதரிசனத்தின்படி, இயேசு கிறிஸ்துவோ
மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில்
முதற்பலனானதும் ஞாயிற்றுகிழமையில்தான்.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது,
அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து
என்னும் ரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க
தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய
அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு
ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
பிலிப்பியர் 3:20-21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை