தேவன் பஸ்காவின் வல்லமையின் வாயிலாக, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கினார். இஸ்ரவேலர்கள் 38 ஆண்டுகளாக பஸ்காவை ஆசரிக்காமல், கானான் தேசத்தில் பிரவேசிப்பதற்கு சற்று முன்பு ஆசரித்தார்கள். புது உடன்படிக்கையின் பஸ்கா வாயிலாக, தேவன் தாமே வந்து மனுகுலத்துக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தார். இந்தக் காரியங்கள் வாயிலாக, பஸ்கா என்பது மனுகுலம் அனைத்தும் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய கட்டளை என்பதை நம்மால் பார்க்க முடியும்.
1,600 ஆண்டுகளாக ஆசரிக்கப்படாதிருந்த புது உடன்படிக்கையின் பஸ்காவை இன்று கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள் நமக்கு மீண்டும் கற்பித்திருக்கிறார்; மேலும் தாயாகிய தேவனுடைய வழிகாட்டுதலின்கீழ், உலகெங்கிலும் உள்ள தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் அதைப் பரிசுத்தமாய் ஆசரிக்கிறார்கள். அது ஏனென்றால், தேவனுடைய பிள்ளைகளாக மாற்றும் அற்புதமான ஆசீர்வாதம் பஸ்காவில் அடங்கியிருக்கிறது.
நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வ வல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து, சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார். உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை (கண்டறிந்ததை விவி) ஆராய்ந்துபாரும்.
யோபு 8:5-8
சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்…இயேசு அப்பத்தை எடுத்து,… இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து,… நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
மத்தேயு 26:17-28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை